பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

அங்கே கம்பனில்லை. கணவனில்லை. கவிஞன் இருந்தான்.
அவன் கரத்தில் எழுத்தாணி எழுதி எழுதி பழுத்திருந்தது.
திரு விளக்கின் ஒளிச்சுடரை தூண்டி விட்டாள்
எரியும் பந்தத்துக்கு எண்ணெயிட்டாள்
அருகிலமர்ந்தாள் அப்போதும் அவனில்லை.
சிந்தனை சிறகடித்து எங்கோ பறந்திருந்தான்
சிதறிக் கிடந்த ஏடுகளை அடுக்கினான்.
இயற்றிக் கிடந்த கவிதைகள் சிரித்தன.
ராமகதை பிறந்த கதையைக் கண்டாள்
காவியச் சோலையிலே கமலவல்லி புகுந்தாள்

கதை பிறந்தது
விடுகின்ற மூச்செல்லாம் நமோ நாராயணாய
கூட்டுகின்ற சுதி எல்லாம் நமோ நாராயணாய
என்றுலகை வலம் வரும் நாரத முனிவன்
வால்மீகியின் தவஞானக் குடிலுக்கு வந்தார்.
வந்தனை வழி பாடு முடிந்தபின்னர்
ஞானிகளின் பேச்சில் ஒரு கேள்வி பிறந்தது.
சகல குணங்களும் பொருந்திய சான்றோன்
சரித்திர நாயகன் வணக்கத்துக்குரியவன்
மனிதப் பிறப்பில் கண்டதுண்டோ என
வினயமுடன் வால்மீகி நாரதரை வினவினார்

நாரதர்
தவத்தில் வலியவர் உன்னைப்போல் பலருண்டு
தவறு பொறுப்பதில்லை. தனித்து ஒதுங்குவார்