பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

அடைக்கலம் ஆனவர்க்குக் கவசம் ஆனவன்
இல்லை என்றவர்க்கு இல்லை என்னாதவன்.
இன்னல் புரிந்தவர்க்கும் நன்மையானவன்
பெற்றவர்க்கு இனியன் பெரியவர்க்கு நல்லோன்
எதிலும் சமநோக்கு எதிரிக்கும் ரட்சகன்
அவனுக்கு நிகர் அவனே ஆவான்.
எடுத்துக் காட்ட இனியொருவன் பிறக்கவில்லை.
கல்யாண குணங்களுக்கும் காட்சி அவனே
ரகு வம்ச குலதிலகன் ராஜா ராமன்
தசரத ராமன் ஜெய ஜெய ராமன்
ஓலத்தில் பெரியவன் கோசலைச் செல்வன் அறிக

வால்மீகி
கொள்கையில் பெரியோன் குணநலம் கேட்டேன்
வாழ்க ராமன் என்று வாழ்த்தினான் வால்மீகி.

நாரதன்
நடந்ததை நாரதன் சொல்லுகின்றேன்
இனி நடப்பதை உன் ஞானம் சொல்லித் தரும்
யுகத்துக்கு யுகம் தொடர்ந்து செல்ல
எழுத்தினில் நிறுத்து இலக்கியம் ஆவான்

என்றிருந்த ஏடுகளைத் தொடர்ந்தாள்
சுந்தர காண்டம் அவள் சிந்தையைத் தொட்டது.
அசோக வனத்தில் அன்னையைக் கண்டாள்.
அழுது அழுது அற்ற குளமான கண்கள்