பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


தொழுது தொழுது துவண்டு விட்ட கரங்கள்
சிவதனுசை முறித்து சீதாபதியானவனை
நினைந்து நினைந்து இளைத்த திருமேனி
வனத்தில் மலர்கள் சொரிந்த மகரந்தம்
மஞ்சள் நிறத்தில் மகிமை படுத்தியதோ?
கற்புக் கனலில் கனிந்து கனிந்து
எழுதிக் கலைத்த சித்திரம் போன்றிருந்தவளை

கம்பனின் எழுத்து கண்ணாடிபோல்
காட்டிற்று.

இரக்கம் என்ற உணர்வில்லா அரக்கன்
வைதேகி இருந்த வனத்துக்கு வந்தான்
மதங் கொண்ட யானை மானின் கன்றை
மருவ அழைத்த வேதனை எழுதற்கரிது.
துரும்பு ஒன்றினை இடையில் போட்டாள்
சீதை
கள்ள மனத்தவனே, கள்ளின் வெறியனே
எள்ளிருக்க இடமின்றி சல்லடைக் கண்ணாக
உன் நெஞ்சைத் துளைக்குமடா ராமபாணம்
உனக்கு மகளிருந்து மற்றொருவன் கடத்தினான்

மனது பொறுக்குமோ மானத்துக்கு விலை
இலையோ

தவத்துக்கு நின்றவளை தவற்றுக்கு
அழைக்கின்ற

சவந்தின்னும் கழுகே சாகத் துணிந்தனையோ
தண்டக வனத்தில் தாடகை மாண்டாள்
ஜனஸ்தானத்தில் கரனும் இறந்தான்
கள்ள வேடமிட்டு என்னைக் கவர்ந்தது