பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

ராம பிரான் தடந் தோளில் கிடந்தாள்
அனுமனும் பக்தியில் ஆழ்ந்து நின்றான்

வைதேகி நினைவுக்கு வந்தாள் நினைத்தாள்
அனுமனின் வார்த்தைகள் அனைத்தும் இனித்தன.

நெடுநாள் உணர்வுகள் நெஞ்சில் பளிச்சிட்டதோ
ஆர்வத்தின் தோற்றமோ அனுமான் வருகை
அல்லால் இதுவும் அரக்கர் மாயமோ
மாருதியை மனக்கலக்கத்தோடு பார்த்தாள்.
குத்து விளக்கைக் குன்றின் மேலிட்டால்
காற்றுக்கு நடுங்காதோ கலவரப் படுவ தியற்கை
பல்லில்லை நகமில்லை பசியில்லை என்பதால்
புலியின் கூண்டுக்குள் புள்ளிமான் வாழுமோ?
வேங்கையின் நாற்றமே மானைக் கொல்லும்
இங்கே சீதை பிழைத்திருந்தாள் திருவருள்.
நன்கு உணர்ந்த அனுமன் நலம் பல சொன்னான்.
வாழ்கின்றான் ராமன். வருகின்றான் படையோடு
என்பதற்கு மகிழ்வாள். இடந்தோள் துடிக்கும்
வருந்துகின்றான் ராமன் வனமெல்லாம் திரிகின்றான்
என்பதற்கு அழுவாள் துயரத்தில் மூழ்குவாள்
ஆற்றுவதெப்படியோ அலமந்தான் அனுமந்தன்

கா.க.-3