பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


அனுமன்
சிறுகுரங்கு நான் நெடுங்கடலைத் தாண்டினேன்
குமுதன் என்றொருவன் குலவரையைப் பறித்தெறிவான்
நீலன் நினைத்தால் நெடுங்கடல் சிற்றோடை
அங்கதன் அறிந்திருந்தால் அசோகவனத்தை
அண்ணலுக்கு முன் பெயர்த்து வைத்திருப்பான்.
இளைய பெருமாள் உங்களைச் சேவித்திருப்பார்
ஜாம்பவான் கொதித்தால் சராசரத்தை அசைப்பார்
சுக்ரீவன் ஆணைக்கு முன்னால் இலங்கையும்
அரக்கரும் இலந்தைப் பழமாக உதிர்வார்கள்.
ராமனின் ஆற்றலையும் அறிந்தவரைச் சொல்லுகின்றேன்.
கைவில் கௌசிகனின் வேள்வி காத்து
கால் விரல் கவுதமனின் மனையாளைத் தந்தது.
கருணையினால் என் குலத்தலைவனுக்கு அரசளித்தான்
பொறுமையினால் இவ்வுலகம் பிழைத் திருக்கின்றது
வெகுண்டிருந்தால் ஒரு பிரளயம் மூண்டிருக்கும்
தாயே நான் அறிந்தது கொஞ்சம்
தாங்கள் அறிவுறுத்த வேண்டியது அதிகம்

என்று விநயத்துடன் தலை வணங்கினான்