பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


அசோக வனத்தின் சோகக்கதையைத்
தொடர்ந்து செல்ல தோகைக்குத் துணிவில்லை
கம்ப நாடன் எழுதிக் குவித்த
ஏடுகளைத் தொகுத்துத் தொகுத்துக் கட்டினான்
கம்பனின் எழுத்தாணி ஓலைமேல் நடம்புரிந்தது
அகண்டகாவிரி அசைந்து நடப்பது போல்
மெல்ல மெல்ல ஊர்ந்து செல்லும்,
சில வரிகளில் விரைந்து குதிரை நடைபேடும்
சில வரிகளில் தாளத்துக்கு ஜதி மிதிக்கும்
சிலஏடுகளில் பொதிகைத் தென்றல் தவழும்
சிலஏடுகளில் குற்றாலத்துத் தேனருவி கொட்டும்
விரல்நொடிப்பில் எழுத்தாணி நடிக்கின்ற நாடகத்தை
வைத்த விழி வாங்காமல் பார்த்திருந்தாள்
அவள் கணவன் ஒரு புலவன் உலகப்பேர் அறிஞன்
என்ற பெருமைக் கடலிலே மிதந்தாள்
அவள் கண்களை தூக்கம் வந்து தழுவிற்று
தூனென்றில் சாய்ந்தபடி உறங்கி விட்டாள்
எழுத்தின் மேல் கருத்தூன்றிச் சென்றபடி கம்பன்
பந்தம் புகைகின்றது எண்ணைவிடு என்றான்.
பந்தம் சுடர்விட ஒருகரம் பிடித்தது.
எண்ணெய் ஏட்டின் மேல் சொட்டியது
வழித்து அவள்முந்தானையில் துடைத்து விட்டான்

பசிக்கென்ன வந்திருக்கிறதெனக் கேட்டான்