பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


வளம் கவளமாக கமகமவென்று மணக்க
பிசைந்து சோற்றை ஊட்டி விட்டாள்
கண்கள் ஏட்டில் மேய்ந்திருக்க
கைகள் எழுத்தாணி நடத்திக் கொண்டிருக்க
நாவும் சுவைத்து, விழுங்கிக் கொண்டிருந்தது.
இரைப்பை எதிரொலித்தது உதட்டைத் தடவினான்
ஒட்டிய பருக்கைகளை அவளுடையில் துடைத்தான்.
கூட்டிக் கிடந்த ஏடுகளைக் கண்டான்.
விழிகள் வியப்பால் விரிந்தன. மகிழ்ந்தான்.
கம்பன்
இத்தனை ஏடுகளும் எழுதியது நானோ?
என்னையும் பொருட்டாக்கி எழுத்தாக வந்தனையோ
பெற்றவளே பெரியவளே பேருலகைப் படைத்தவளே
அழுகின்ற குழந்தைகளுக்கு அன்னையும் நீயே
கொஞ்சுகின்ற தந்தையர்க்கு குழந்தையும் ஆனவளே
என்னே நின்பெருங்கருணை பெண்ணே வாழ்த்துகிறேன்
என்று இன்னிசை கூட்டினான். அப்போது
விழித்து எழுந்தாள் கமலவல்லி
மன்னிக்க என்றருகில் வந்து அமர்ந்தாள்
காளத்தில் உணவெடுத்துப் பரிமாறினாள்