பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


அற்புத ராமாயணம் ஆனந்த ராமாயணம்
அத்யாத்ம ராமாயணம் அகஸ்தியாயணம்
வாசிஷ்ட ராமாயணம் போதாயணம்
சேஷராமாயணம் சம்க்ஷேபராமாயணம்
இவையன்றி பாசனும் காளிதாசனும்
விட்டாரில்லை கிடைத்த இடத்தில் எல்லாம்
ராமனைத் தொட்டிருப்பார் மற்றுபல
சமணச் சார்பில் ரவிசேனர், குணபத்திரர்
எழுதிய காவியங்கள் ராமகதை சொல்லும்
ஹேமச்சந்திரரும் எழுதியது உண்டு
புத்தன் பழம் பிறப்பு வரிசையிலும் ராமனுண்டு
ராம ஜாதகம் வெஸ்வந்தர ஜாதகம்
சம்புல ஜாதகம் லங்காவதாரசூத்திரம்
தசரத ஜாதகத்தையும் தள்ளுவதற்கில்லை
என்றின்ன பலவற்றில் தெளிந்தவன் வால்மீகி
சரண் என்று நான் வணங்கும் ஞானப்புலவன்
எழுத்துக்கு நேர்நின்று எழுதவும் ஆகுமோ
தருமம் தவறாத கருமத்தில் நின்று
பலன் கருதாத பக்தியில் நடந்து
ஐயம் கலவாத ஞானத்தில் தொடர்ந்தால்
மனிதன் தெய்வம் ஆவான் என்பது
வால்மீகி வகுத்துக் கொண்ட நாயகர்கள்
நான் கண்ட ராமன் அவனல்ல தெளிவீர்
மனித தர்மத்தை மனுக்குலத்துக்கு உணர்த்த
தெய்வம் மனிதப் பிறவி எடுத்தது என் கதையில்

குழந்தையின் நோய்க்குத்தானே மருந்துண்டு