பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


குணவீரன்
முழுநூலும் அவர் எழுதவில்லை முடிவுரை
உத்திர காண்டம் கூத்தரின் கைத்திறன்
என்பதென்ன உண்மையோ குணவீரன் கேட்கின்றேன்
என்பதற்கு கூத்தர் எழுந்து விடையிறுத்தார்
கூத்தர்
வைதேகி மீது கம்பருக்குப் பக்தி அதிகம்
மறுபடியும் வனம் போக்க மனம் ஒப்பவில்லை.
முடிசூட்டோடு காவியத்தை முடித்துக் கொண்டார்
அதன் தொடர்கதையை நான் தொடர்ந்தேன்
கம்ப ராமனுக்கு இங்கே அரங்கேற்றம்
கம்பரின் சிறப்பில் நான் பங்கு கேட்கவில்லை
புகழேந்தி
மதுரத்தமிழ் முழங்கும் மாமதுரைப் புலவன்
புகழேந்தி நான் போற்றுகின்றேன் கம்பரை
கம்பரின் இலக்கிய நாயகன் ராமன்
சரராமன் புகழ்ச்சியோ நூற்றுக்கு விழுக்காடு
பார் வேந்தன் குலோத்துங்கனிலும் அவன் பெரியனோ
ஆர்த்த சபை நூற்றொருவர் என்ற அவ்வை
வார்த்தை பதினாயிரத் தொருவர் என்றாள்
சரராமனை சொன்னது என் நட்பின்பெருக்கு
பார்வேந்தன் என்பதிலும் மன்னன் பாவேந்தன்

பதினாயிரத்தில் ஒருவனாய்ப் பாராட்டினேன் காண்க.