பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தேனால் தமிழளந்த சீர்காழிப் பிள்ளையோ
சிவன் தூது நடந்த செந்தமிழ்ச்சுந்தரனோ
பொன்வேய்ந்த சோழனுக்குப் புகழ்வேய்ந்த சேக்கிழாரோ
திருவாசகம் சொன்ன மணி வாசகனோ
நாலாயிரம் பாடிய ஆழ்வாரில் ஒருவரோ
சோழன் முன்னிலையில் செல்லாத ஒன்றுக்கு
அரங்கன் சந்நிதியில் ஆகாத ஒன்றுக்கு
தில்லையில் பாயிரம் பெறவந்த கம்பன்
என்ன பெரிய கொம்பனோ என்றார்சிலர்
மூவாயிரவர் ஒன்றுகூடி முடிவு சொல்ல
கம்பனுக்கு வயது போதுமா என்றார்சிலர்
எழுத்தாணி மழுங்க, எழுதியது பெரிதல்ல
எழுத்தும் சீரும் எதுகையும் மோனையும்
நான் நீ என்று முன் நின்றது பெரிதல்ல
தில்லையில் அவர் திரிந்து திரிந்து ஓய்ந்தார்
கோவிந்தன் சந்நிதியில் சலித்துச் சாய்ந்தார்
அன்றிரவு ஒரு தீட்சர் வீட்டுப்பிள்ளையை
அரவம் தீண்டிற்று அந்தோ பரிதாபம்
மருந்துகள் பலிக்கவில்லை மந்திரம் ஜெயிக்கவில்லை
மாண்டதற்கு திரண்டனர் தில்லை அந்தணர்
ஈமக் கடனாற்றி எரி எடுத்தார் அதுபோது
துக்கம் கேட்பதற்கு கம்பரும் வந்தார்

கம்பர்
அனந்தனோ வாசுகியோ பதஞ்சலியோ அறியேன்

ஆழியான் பள்ளி கொண்ட அணையே