பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72வெறி கொண்டு சொன்னாரோ
வீறு கொண்டு எழுந்தாரோ
கம்ப மதகளிறின் கட்டுத்தறி அறுந்ததம்மா
காலம் சென்றதோ காலன் வென்றானோ
நாட்டரசன் கோட்டையிலே ராமாயணப்
பாட்டரசன் துஞ்சினான் என்பார் என்ப
மானிடக் கம்பனுக்கு வயது நூறே எல்லை
காவியக் கம்பனுக்கு காலக் கணக்கில்லை
சாவில்லை இருக்கின்றார் சரித்திரப் புகழாக
யாமறிந்த புலவரிலே கம்பரைப் போலில்லை என்று
வள்ளுவர் இளங்கோ வரிசையிலே வைத்து
நல்ல தமிழ்ப் பாரதியும் சொன்னான் என்றால்
நான் என்ன பெரிதாகப் புகழ்ந்திடுவேன் வணங்குகின்றேன்
உலகத்து இலக்கியப் பேர் அரங்கில்
தமிழனும் இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு

வாய்ப்பளித்த கம்பநாடன் வாழியரோ!


ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf