பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறைவன் சிரிக்கிறான்

கதிரவன் வருகைக்கு கமலங்கள் சிரிக்கின்றன.
வெள்ளி நிலவுக்கு அல்லிசிரிக்கின்றது.
அள்ளித் தெளித்த பனித்துளிகள் எனவே
சிந்திய பவள மல்லிகள் சிரிக்கின்றன.
மண்மகள் சிரிக்கின்றாள் மல்லிகையாக
மலைமகள் சிரிக்கின்றாள் வழியும் அருவியாக
அலைபுரளும் வெண்ணுரை கடல் மகளின் களிப்பே
வானும் சிரிக்கின்றது, விண் மீன் குலங்களாக
பயிர்க்குலம் சிரிக்கின்றது கதிர்மணிச் சரங்களாக
இயற்கையின் சிரிப்பே இவ்வுலகின் செழிப்பு
மற்ற உயிர்களுக்கில்லா தனிச்சிறப்பு
மனிதன் ஒருவனே சிரிக்கத் தெரிந்தவன்
இவனைப் பார்த்து இறைவன் சிரிக்கின்றான்
ஏனோ ஏனோ இரங்குகின்றேன்.
எறும்புக்கும் புற்றுண்டு எலிக்கும் வளையுண்டு
குருவிக்கும் கூடுண்டு குகையுண்டு விலங்குகட்கும்
தலைசாய்க்க இடமில்லா மனிதனுண்டு. ஏனோ
இவனைப்பார்த்து இறைவன் சிரிக்கின்றான்.
மயிலுக்கும் உடுத்த வண்ணத் தோகையுண்டு
கரடிக்கும் போர்த்தக் கம்பளியுண்டு
செம்மறிக்கும் மெத்தென்றடர்ந்த ரோமமுண்டு