பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


கோழிக்கும் மானங்காக்கச் சிறகுண்டு
புல்லும் புறவிதழால் தன்னை யுடுத்தும்
ஆடையின்றி வாடும் மனிதனுண்டு. ஏனோ,
இவனைப் பார்த்து இறைவன் சிரிக்கின்றான்.
காற்றிலே ஏறி விண்ணை அளப்பான்
ஆற்றைத் தேக்குவான் அலைகடலில் மிதப்பான்
மண்ணும் தனக்கே சொந்த மென்பான்
ஒருநாள் மண்ணுக்கே சொந்தமாவான்
இவனைப் பார்த்து இறைவன் சிரிக்கின்றான்.
காயை கறிவைப்பான் கனியில் சாறெடுப்பான்
கரும்பை பிழிந்து கற்கண்டு ஆக்குவான்
நெய்யில் பொறிப்பான் நீராவியில் பொங்குவான்
ஆறு சுவையிலும் அருந்தத் தெரிந்தவன்
ஐயா பசியென்று கையும் ஏந்துவான்
இவனைப் பார்த்து இறைவன் சிரிக்கின்றான்.
அறிவில் பெரியது ஆறாவது என்பான்
அறிவினால் அனைத்தையும் ஆக்குவேன் என்பான்
கல்லிலும் செம்பிலும் கடவுளைப் படைப்பான்
வேதாந்த சித்தாந்த விளக்கம் சொல்வான்
உலகக் கணக்கெல்லாம் ஒரு நொடிக்குள் படிப்பான்
ஆனால் தன் கணக்குத் தனக்குத் தெரியாது

இவனைப்பார்த்து இறைவன் சிரிக்கின்றான்.