பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூத்தபிள்ளை

ஓங்காரக் கையனே வெண்பிறைக் கொம்பா
நீலக் கடலில் நீந்தி எழுந்து
மூலக்கனவில் மூண்ட கொழுந்தே
நான் மணி மாலை சூடிய நாயகமே

பாரதிக்கினிய பாண்டித் துரையே
மணக்குள விநாயகா மனத்துள நாயகா
முனியரையன் மாபாரதம் முடி போட்டுச் சொல்ல
பனிவரையில் தன் கொம்பெடுத்து வரைந்த தம்பிரானே

ஆலடி அரசடி ஆற்றடி கிணற்றடி
ஊரடி தோறும் உறவாடும் பிள்ளாய்
தாய்க்கு மூத்தவனே தந்தைக்கு முன்னவனே

தம்பிக்கு இளையவனே தும்பிக்கை யனேதுணை.