பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


வயலூர்

அருணகிரிக்கு அடியெடுத்து கொடுத்தோனே
அடியேனுக்கு ஒருவரி எடுத்துக் கொடுத்தால்
சங்கத் தமிழ் எடுத்து உன்னைப் பாடேனோ
சங்கடங்கள் தீர்ந்து நானும் வாழேனோ

கயலூறும் விழியாளே வள்ளிப் பெண்ணே
மயலூறும் மொழியாளே தெய்வச் செல்வி
மயிலாறும் பெருமானே வயலூர் அரசே
புயலூறும் மனத்துக்கு அமைதி அருள்வாயே

கந்தகிரி

பழம் இல்லை யென்று பழம் நீயான தெய்வமே
செழித்து வளரும் சேலத்து மாந்தோப்பில்
பழுத்துக் குலுங்கும் பழத்துக்கு வந்தாயோ
வழுத்தும் அடியார் வரத்துக்கு வந்தாயோ

கன்னிமார் ஓடைக்கு வள்ளி வருவாளென்று
புள்ளிமான் துரத்த வள்ளலும் வந்தாயோ
சேவலங் கொடி பிடித்து சேலம் லைக் கெழுந்தது.
குறிச்சிமலர் பறிக்கவோ குறமகளைப் பிடிக்கவோ.

சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்த
களைப்புத் தீரவே கந்தகிரிக்கு வந்தாயோ
தணிகையிலே மனமும் ஆரமல் தரியாமல்
சாந்தானந்தச் சாரலுக்கு எழுந்தாயோ

ரூன்றேறி நின்றெரியும் தெய்வத் திருவிளக்கே
என்மனக் குகையின் இருளகற்ற வாராயோ
நாடிவரும் அடியாரைத் தேடிவரும் முருகோனே
பாடி வரும் அடியேனின் பாடு தீர்த்தருள்வாயே