பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


பாண்டியன் சங்கத்துக்கு நீ தலைவன் ஆனாலந்த
பசுந்தமிழுக்கு நான் புலவன் அல்லவோ
செர் திரு மகளுக்கு நீ மருமகன் ஆனால்
செந்தமிழ் அன்னைக்கு நான் மகன் அல்லவோ
தழல் பழுத்த கனியே தண்டபாணி நின்
தயை பழுத்தால் தழைத்து மனம் பழுத்திட மாட்டேமோ
தினைப்புனத்து ஆத்தாளே, தேவர் தவக்கொழுந்தே
வினைப் புனத்தில் என் பகையை வேரறுக்க வருவீரே

3


செந்தழலில் பழுத்த சிவம்
     தென்பழனிக் குன்றினில்
நின்றதென்ன கோலமோ
     கொண்டதென்ன கோபமோ
வீரம் ஒரு வடிவானதோ
     ஈரம் அதன் முடிவானதோ
சூரனை மாய்த்திட்ட தீரனே
      குழந்தை வடிவேலனே

4


பழனியில் நீ பண்டாரமாய் நிற்கின்றாய்
பரங்குன்றில் பெண்டாட்டிமார் இருவர் இருக்கின்றார்
நீ என்ன சம்சாரியா? சன்யாசியா?
முருகா! திருமால் மருகா!

ஒரு சமயம் அப்பனிடம் அழுது பழங்கேட்கின்றாய்
ஒரு சமயம் அதட்டி அப்பனுக்கே பாடம் சொல்கின்றாய்
நீ என்ன ஆசானா? ஆசை மகனா?
முருகா ! திருமால் மருகா !

ஒருபெயரால் முத்துக் குமரன் என அழைக்கின்றார்
ஒருபெயரால் குறிஞ்சிக் கிழவன் என ஓதுகின்றார்
நீ என்ன கிழவனா? குமரனா?
முருகா! திருமால் மருகா!