பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10
பழமுதிர்சோலை

வளங்கொஞ்சும் பழமலையில்
குறவஞ்சி உறவாட
சினவேங்கை மரமான
கிழவேட வடிவேலா
கடல் சுவர குன்றுருவ
நெடுவேலெடுத்த குமரா
கடமைகள் நடந்தேறு வரவேணும்
மயிலேறும் பெருமாளே.


திருத்தணி


தணிகைமலை செல்வதே தமிழ்ப் பெருங்கடலே
வணிக மனத்தோடு உன்னை வழி பட்டேனோ
நினைவில் உன்னை நிறுத்தாமல் நிசாம் அலைந்ததோ
இனி உய்ய வழி என்ன பன்னிருகைப் பெருமாளே!

திருப்பரங்குன்றம்


திருப்பரங்குன்றினில் விருப்புடன் இந்திரன்
திருக்குமரியை மணந்த திருப்புகட் செல்வனே
பொருட்பிடம் சிறைநின்ற தமிழ்க்கீரனை மீட்டவனே
நிரப்பின்றி நான் வாழ வருக வருகவே.

அண்ணாமலை


அருணகிரியின் தமிழுக்கு ஆடிவந்த மயிலே
கருணை பொழியும் முகில காணவே வந்தேன்
தருணம் அறிந்து அந்த சன்முகனுக்குச் சொல்லாயோ
சரண கமலங்களைப் பறறிட எனக்குத் துணையாக நில்லாயோ.

சங்கெடுத்து நீராட்டி சந்தனக் காப்பிட்டாரோ
சங்க தமிழெடுத்த தாலாட்டில் தளைப்பட்டாயோ
மங்கை வள்ளி மயக்கத்தில் வயப்பட்டாயோ
சங்கரன் மகனே சரவணனே வாராயோ