பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

II

வடபழனி


வடபழனி என் அருகிருக்க வருவதில்லை நானோ
வரமருளும் திறமிருக்கும் நீ வராதிருப்பதேனோ !
ஔவைக்கு சுட்டபழம் கொடுத்து அண்ணலே நீ
கற்றது அரியதும் பெரியதும் அன்றே!
கீரனைச் சிறைமீட்டது சம்மாவோ ஐயா!
பத்துப்பாட்டில் முதற்பாட்டு உனக்கே !
அன்று நீ அருணகிரிக்கு அடியெடுத்துக் கொடுத்தாய்
இன்று பலநூறு திருட்புகழ் பாடுகின்றது உன்னை
பின்னும் ஒரு ஊமையை பேச வைத்தாய்
குருபரன் ஆனான், கலிவெண்பா சொன்னான்
வடலூர் பிள்ளையை வள்ளல் ஆக்கினாய்
பல்லாயிரம் அருட்பா பாடினார் உனக்கே.
பாம்பனடிகள், பகழிக்கூத்தன் முதலாக
பலநூறு ஞானியரும் பாடினார் பாடினார்
வேலனும் சில வரிகள் எழுதியோன் எழுதினேன்
வீரையின் மகனே நின்னருள் என்னவோ


ஏரகம்


வாலைக் குமரியவள் வயிறு வாய்க்காமல்
தர்த மகனே கந்தையா தந்தைக்கு நீ சொன்ன தென்னையா?
போர்க் களத்தில் அவுணர்களைப் புறங்கண்ட வேலையா
ஏரகத்து வீரையா எனக்கினி வேறு யாரையா


செந்தூர்


அலையாடும் கரையருகே விளையாடும் தமிழழகா
படையாறு வீடாக களையாறும் இளையோனே
திணையோடு தேரைன்ன இளையாளை நயந்தாயே
வினைமாள வருகின்ற எனையாளும் பெருமாளே!