பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பிரணவத்தை ஒரு பிள்ளை
         ஆக்கிப் பார்த்தாள்
சரவணத்தில் ஒரு பிள்ளையை
         அள்ளி எடுத்தாள்
தேவி எங்கள் கருமாரி.

சிவனுக்கு ஆகத்தில்
     ஒரு பாகத்தைக் கொடுத்தாள்
சிங்க வாகனத்தாள் திருவேற்காட்டாள்
     தேவி எங்கள் கருமாரி.


மதுரை மீனாட்சி

காஞ்சியிலுன்னை காமாட்சி என்பர்
காசியில் விசாலாட்சி என்றழைப்பர்
மதுரையில் உனது திருப்பெயர் மீனாட்சி
மைலையில் நீயே கற்பகவல்லி

ஒற்றியூர் இட்ட பெயர் வடிவுடைநாயகி
தெற்கு முனையில் கன்னியா குமரி
தில்லையில் அன்னை சிவகாம சுந்தரி
திருக்கடவூரில் அபிராம சுந்தரி

ஆனைக்காவில் அகிலாண்டேசுவரி
நாகைக் காரோணத்தில் நீலாயதாட்சி
மேலைமலைக் கொல்லூரில் மூகாம்பி
மைசூர் மலையில் மாகாளி சாமுண்டி

சமயபுரத்தில் செந்தூர மாரி
தஞ்சை நல்லூரில் சஞ்சீவி மாரி
பெரிய பாளையத்தில் வேப்பிலை மாரி
திருவேற்காட்டில் தேவி கருமாரி

தலத்துக்கு ஒரு பெயர் தவத்துக்கு ஒரு கோலம்
தாங்கி நிற்கும் தாயே உமையே

வேங்கையின் மேலிருக்கும் வீரையே சரணம்