பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அப்பர்

வானால் புகழளந்த வாகீசப் பெருமாளே
தேனால் தமிழளந்த செந்நாப் புலவனே
நானால் உயிரழிந்த நாள் காண வந்தேன்
ஊனால் ஊண் வளர்த்தேனை மன்னித்தருளாயே

நீற்றரையில் சுட்டெரித்தார் நெடுங்கடலில் பூட்டிவிட்டார்
மாற்றரிய நஞ்சூட்டினார் மதகரியை மூட்டிவிட்டார்
சாற்றரிய கொடுமைகளை வெற்றி கண்டாய்.
போற்றரிய புகலூர் அரசே வாழி.

கல்லும் கனிந்து மிதந்து கரையேற
சொல்லும் த மிழென்ன சொல்லுவீர் ஐயா
கொல்லும் வினைக்கு மருந்தென்று வந்தேன்

செல்லும் வழிக்கு துணையான தெய்வமே

திருப்பதி

ஏழுமலையாண்டவனே எங்கள்
திருவேங்கடவா
சூழுகின்ற துயரங்களைத் துடைக்கின்ற
பெருமானே
வாழுகின்ற உயிர்கட்கெல்லாம்
உயிராக ஆனவனே
தாழுகின்ற நேரத்திலெல்லாம்
தாங்குகின்ற தெய்வமே

காலை மலரு முன்னே கரதிவன் எழு முன்னே
நான் முன்னே நீ முன்னே என்றே நாடுவார்
திருமறைகள் நான்கும் தேடக்கிடைக்காத

அரும்பொருளைத் திருமலையில் மெய்மறந்து தேடுவார்