பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

பனிரெண்டு ஆழ்வார்களும் பாடிய பின்னே அண்ணலே உன்னை என்னென்று பாடுவேன் கரந்த மாட்டின் காம்பைச் சுவைக்கின்ற கன்றனேன் கருணை பெரிதுடையவனே கணக்கில் வரவு வைத்துக் கொள்.

2

நாலாயிரம் தமிழ் கேட்ட நல்ல பெருமாளே
பாலாழி துயின்றிருக்கும் பரம் பொருளே
நானும் ஓராயிரம் சொல்ல வந்தேன்

கம்பன் தமிழுக்கு தலை பகளும் கிழமகளாய்
கொட்டிக் கிழங்கெடுத்து கூவி விற்குள்
கணிகண்ணன் தமிழுக்கு கட்சி மணிவண்ணன்
பை நாகப்பாய் சுருட்டிப் போனான்

சுந்தரன் தமிழுக்கு சிவன் தூது நடந்தான்
வாதவூரன் தமிழுக்கு நயப்பாயானது
அப்பரின் தமிழுக்கு கல்லும் தெப்பமானது
சம்பந்தன் தமிழுக்கு எலும்பு பெண்ணானாது
ஒளவையின் தமிழுக்கு ஒருபனந்துண்டம்

பங்குக்கு மூன்று பழம் தந்தது
அருணகிரியின் தமிழுக்கு முருகன்
கம்பத்து இளையனாய் காட்சிக்கு வந்தான்
வடலூர் தமிழுக்கு தண்ணீரில் விளக்கெரிந்தது

கடவூர் தமிழுக்கு இருள் நாளில் நிலா வெரிந்தது
வேங்கடவர்க்கு என் தமிழ் கேட்க நேரம் இல்லையோ
என் இதயத்தில் தமிழ்தான் இல்லையோ
வேண்டுவார் வேண்டுவன தருகின்ற பெருமாளே

என் வினை தீர்த்து ஆளவேண்டுகிறேன்

3

வேங்கடத்துப் பெரியவனே
        மாயவனே ரமணா நீ
மாலவனோ வேலவனோ மாதவளோ
        யாரறிவார்
கோடி கோடி பக்தர் உன்னைத்
        தேடித் தேடி வருவார்
கோவிந்தா கோவிந்தா என்று
        கூவி கூவி அழைப்பார்

இ. சி-2.