பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

யோகி என்றும் அவனைச் சொல்லுவார்
விரைந்து சுழலும் சக்கரம் அதி வேகத்தால்
ஓய்ந்து அசைவற்றிருப்பது போலிருக்கும்
யோகியும் மோனத்திலிருப்பான் தோற்றமே
ஞானக்கடலில் முத்துக் குளிப்பான்
தெய்வம் அவனோடிருக்கும் தேவனும் அவனேயர்வான்
ஆக ஆசையை வென்று பாசத்தைக் கடந்து
காமத்தை எரித்து குரோதத்தை விட்டு
புலனை அடக்கி புத்தியில் தெளிந்து
தொழிற்படுக மகனே தொழிற்படுக
தன்னை வென்று தலைவன் ஆவாய்
புறப்பார்வையற்று உள் நோக்கிப் பார்
உன்னை அறிவாய் என்னையும் உணர்வாய்
நீயும் நின் நினைவும் நானே யாவேன்
முனிவனும் ஆவாய் முக்தனும் ஆவாய்
வேள்வி என்பதையும் விளக்குகின்றேன்
மற்றவர்க்கு ஆற்றும் தொண்டு வேள்வி
உண்ணுவது உடுத்துவது உனக்கென்றில்லாமல்
எனக்கென்று அர்ப்பணித்தல் வேள்வி
எத் தொழிலை செய்து ஏதவத்தை பட்டாலும்
இறைவன் செயல் என்று இருப்பதும் வேள்வி
நெருப்பிலே நெய்யிட்ட ஓமத்தீயினும் பெரிது
ஞானத் தீயில் புடமிட்ட நற்கருமம்
பாண்டு மகனே என்னை வேண்டுவதும் வேள்வி
பிறவிப் பிணிக்கு பெரிய மருந்து
கல்வி ஞானம் கடுந்தவம் இல்லாது
இறைவனை பிடிக்க எளிதான வழியுண்டு
எடுத்துக்காட்ட சில சொல்லுகின்றேன்
ராமனைத்தொடர்ந்து வனம் போன இலக்குவனும்
ராமனைத் தொடாந்து மனம்போன பரதனும்
கொண்டிருந்த அன்பின் பெயறே பக்தி
வைதேகி கணவன் வருவான் என்று
வனத்தில் தவமிருந்தாள் கிழவி சபரி