பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

சஞ்சயன்

அச்சம் நமக்கில்லை படை பெரிதினும் பெரிது

பதினெட்டில் பதினொன்று, பாண்டவர்க்கு ஏழே”

திருதன்

“அச்சுதன் நமக்கில்லை என்பது மறந்தனை

அவன் அருளினும் நமது ஆற்றல் வலிதோ”

சஞ்சயன்

மாண்பு மிக்க மன்னவனே என் தலைவா
அறிந்திருந்தும் போரை அனுமதித்தது ஏனோ”

திருதன்

கண்ண பெருமான் தூது வந்தான்
பாண்டு மக்களுக்கு பங்குதர மறுத்தனர்
முடிவில் ஐந்து வீடும் இல்லை என்றனர்
அழியாத வீடு தரும் பெரு மகனை அழிக்க
ஆழக் குழி பறித்து சதி புரிந்தார். அறியாமை!
பாசத்தால் நானும் கட்டுண்டேன் வழியில்லை
கண்ணனும் விண்ணளவு வளர்ந்து காட்டினான்
ன் கண்கள் ஒளி பெற்றன, கண்ணனைக் கண்டேன்
காரசனை, நாரணனை கண்குளிரக் கண்டேன்
காதலும் வரம் என்ன வேண்டும் எனக் கேட்டான்
நீண்ட ஆயுளும் நெடிய புகழும்