பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

103



ஆடும் முறை: ஆட்டக்காரர்கள் எல்லோரும் வட்டத்திற்கு வெளியே பரவலாக நின்று கொண்டிருக்கும் பொழுது, ஆசிரியர் வட்டத்திற்குள் நின்று பந்தை சற்று உயரமாகத் தூக்கிப் போட்டுக் கொண்டே ஒரு ஆட்டக்காரரின் பெயரைக் கூப்பிட வேண்டும்.

பெயருக்குரிய ஆட்டக்காரர் (மாணவர்) ஓடி வந்து பந்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அவன் பந்தைப் பிடித்தவுடன் மற்ற ஆட்டக்காரர்கள் தூரமாக, ஓட ஆரம்பித்துவிடுவார்கள். பந்தைப் பிடித்த ஆட்டக்காரர் உடனே 'அங்கே நில்' என்று சத்தமாகக் கூறவேண்டும்.

அங்கே நில் என்றவுடன் அத்தனை பேரும் அவரவர்கள் இடங்களிலே அசையாமல் நின்று கொள்ள வேண்டும். வட்டத்திற்கு அருகாமையில் நிற்கின்ற யாராவது ஒரு ஆட்டக்காரரை, வட்டத்திற்குள் பந்துடன் நிற்பவர் அடிக்கலாம்.

தன்னைத்தான் அடிக்கிறார் என்று தெரிந்து கொண்ட ஆட்டக்காரர். நிற்கும் இடத்திலிருந்தே வளைந்தும், நெளிந்தும், குனிந்தும் உட்கார்ந்து கொண்டும் அடி படாமல் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் இடத்தை விட்டு நகரக்கூடாது. ஆள் மேல் பந்து பட்டுவிட்டால் அடித்தவருக்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும். முன்போல் ஆசிரியர் பந்தை உயர்த்தி, ஒருவரை அழைத்திட மீண்டும் ஆட்டம் தொடரும்.

70. கோட்டையைப் பிடிப்போம்

(Storming the Fort)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்கள் அனைவரையும் இரண்டு சம எண்ணிக்கையுள்ள குழுவினராகப் பிரிக்க வேண்டும்.