பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

69


________________

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முன்னர் கூறிய ஆட்டங்களில் ஒருவர் ஒருவராகத்தான் ஓடுவார்கள். இதில் இருவர் உட்புறமாக தங்கள் ஒவ்வொரு கால்களையும் இணைத்து இருவராகச் சேர்ந்து ஓட வேண்டும். ஓடத் தொடங்கும் கோட்டின் பின்னேசம எண்ணிக்கை யாகப் பிரித்த நான்கு குழுவினர்களையும் இருவர் இருவராக வரிசையாக நிற்பது போல ஒவ்வொரு குழுவையும் நிறுத்த வேண்டும். இரட்டையராக இணைந்திருப்பவர்கள், தங்களது அடுத்தடுத்து இருக்கின்ற கால்களை கைக்குட்டையால் இணைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். எல்லா குழுவினரும் இவ்வாறு இருவர் இருவராக நின்று கொண்டிருக்க வேண்டும். ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு 60 அடிக்கு அப்பாலுள்ள கோட்டுக்குப் போய் கடந்துவிட்டு முதலில் நிற்கும் இரட்டையர் திரும்ப வேண்டும். திரும்பி வந்து தங்களுக்கு அடுத்து நிற்கும் இரட்டையர் இருவரைத் தொட இவ்வாறு கடைசி இரட்டையர் ஓடி முடிக்கும் வரை ஆட்டம் தொடர்கிறது. முதலில் முடிக்கின்ற இரட்டையர் குழுவே வெற்றி பெற்றதாகும். குறிப்பு: ஓடத் தொடங்கும் கோட்டைக் கடந்ததும் தான் அடுத்த இரட்டையரைத் தொட வேண்டும். கால் கட்டை எந்தக் காரணம் கொண்டும் பிரிக்கக் கூடாது. 40. ஒருவர் பின் ஒருவர் ஓட்டம் (Single Relay) ஆட்ட அமைப்பு: மாணவர்களை சம எண்ணிக்கை யுள்ள நான்கு குழுவினர்களாகப் பிரித்து ஓடத் தொடங்கும்