பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

105


“முகுந்தா! உனக்கு அம்மா இருக்கிறார்களா? அப்பா என்ன செய்கிறார்?’ என்று கேட்டார் தலைமை ஆசிரியர்.

“எனக்கு அம்மா இல்லை. அப்பா இருக்கிறார். அவர் ஆபீசில் வேலை செய்கிறார்” என்று கூறினான் முகுந்தன்.

“அம்மா இல்லையா? அதனால் தான் அம்மாவின் படத்தை வரைந்திருக்கிறாய்?” என்று சொன்னார் தலைமை ஆசிரியர்.

அம்மாவின் படம் என்றதும், முகுந்தனுக்கு வீட்டிலுள்ள அம்மாவின் படம் நினைவிற்கு வந்தது. அந்தப்படத்தில் முகுந்தன் இரண்டு வயது குழந்தையாக இருக்கும்போது அவன் நடந்துவர, அவனைத் தூக்குவதற்காக இருகைகளையும் நீட்டிக்கொண்டு இருந்தாள். தாயின் கையில் தன்னை அடைக்கலப்படுத்திக் கொள்ள முகுந்தனும் இரு கைகளையும் தூக்கிக்கொண்டு ஓடிவருகிறான்.

முகுந்தனின் தாய் ஆசையோடு முகத்தில் மகிழ்ச்சி பொங்க தன் மகனைத் தூக்க வருகிறாள். இந்த நினைவு முகுந்தன் மனதைவிட்டு அகலவில்லை. அவன் ஒவ்வொரு நாளும் அந்தப் படத்தைப் பார்ப்பான். அம்மா அவனைக் கைநீட்டி அழைப்பது போல் நினைப்பான்.

கார்த்திகேயன் தன் மகன் தாயின் படத்தைப் பார்ப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறார். சில