பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பூவை எஸ். ஆறுமுகம்


“முகுந்தா! உன் ஒவியத் திறமையினால் நம் பள்ளிக்குப் பாராட்டுக் கிடைத்திருக்கிறது’ என்றார் ஆசிரியர்.

அன்று மாலை பள்ளியில் முகுந்தனுக்குப் பாராட்டுக்கூட்டம் நடத்தப்பட்டது. முதல் பரிசாகப் பெற்ற வெள்ளிக் கோப்பையை முகுந்தனிடம் தலைமை ஆசிரியர் கொடுத்தார். ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தார்.

விநோதினி தன் தம்பிக்கு ஓவியப்போட்டியில் பரிசு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அவன் ஓவியம் வரைவான் என்று மட்டும் நினைத்தாள். அவன் ஒவியத்தில் வல்லவன் என்பது பரிசின் மூலம் தெரிந்து கொண்டாள்.

மாலையில் கார்த்திகேயன் அலுவலகத்தை விட்டு வீட்டிற்குப் புறப்பட்டார். காலையில் விநோதினி தன்னிடம் கூறியதை நினைத்தார். முகுந்தனுக்குத் தேவையான ஒவியப் பிரஷ் ஒன்றை வாங்கிக் கொண்டார். வீட்டிற்கு வந்து தன் மகன் முகுந்தனிடம் கொடுக்கவேண்டும் என்று ஆசையோடு வந்தார்.

முகுந்தன் பெற்ற பரிசுகளைத் தன் தாயின் படத்தின் அருகில் வைத்து வணங்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் கார்த்திகேயன் திகைத்து நின்றார்.