பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பூவை எஸ். ஆறுமுகம்

என்று தலைமை ஆசிரியர் கண்டிப்பாகக் கூறிவிட்டார். நேரு மேனி நடுங்க விடைபெற்றான்.

அந்திப் பொழுது.

நேரு சிந்தனை வசப்பட்டவனாகக் குடிசைக்குள் நுழைந்தான். “அப்பா...அப்பா! நாயர் கடையிலே எடுபிடி வேலைக்குச் சொல்லியிருந்தேன்; என்னைப் பெற்ற தாய் தந்தையோட பசியைப் போக்க வேண்டியது என்னோட கடமை இல்லிங்களா? ஆனா, தலைமை ஆசிரியர் மறுத்துட்டாருங்களே! நான் என்ன செய்வேன்?” என்று விம்மினான்.

“மகனே! கண்ணுக்குக் கண்ணான படிப்பை விட்டுட்டு எங்களுக்குப் படி அளக்கத் துணிஞ்சியா? வேண்டாம்; வேண்டவே வேண்டாம்! படிப்பை விடவே கூடாது! அதுதான் நமக்குச் சொத்து ராத்திரி மட்டும் நாம பட்டினி கிடப்போம்! அப்பாலே, பொழுது விடிஞ்சிடாதா, அருமை மகனே!” என்று விம்மினார் சாம்பான்.

அப்போது, வாசலில் என்னவோ சத்தம் கேட்டது.

தலைமை ஆசிரியர் காந்திராமன் அங்கே நின்றார்.