பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா

11

“தேடிவந்த தெய்வமாட்டம் வந்திருக்கீங்க! உள்ளே குனிஞ்சு வாங்க ஐயா!” என்றான் நேரு.

“ஐயா, பெரியவரே! உங்களோட பொறுப்புணர்ச்சியை நான் ரொம்பவும் பாராட்டுகிறேன்! ஆண்டவன் நல்லவன்—நான் இருக்கிறப்ப, நீங்களெல்லாம் ஏன் பட்டினி கிடக்கவேணும்? எல்லோரும் இப்பவே என் வீட்டுக்குப் புறப்படுங்க—இனி நேரு என் பிள்ளை!—ஆண்டவனோட நல்ல பார்வை இப்பத்தான் என்மேலே பட்டிருக்குதுங்க? இனி எங்க வீடு கோகுலம்தான்!” என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார் காந்திராமன்.

“ஒளிபடைத்த கண்ணினாய் வா!...வா...!”

அதோ ஆனந்தமாக ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறான் நேரு!...