பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீதி காத்த தருமம்!

உலகத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி காட்டவும் துணைபுரியவும் இந்த நீதிக்கதைகள் ஏதுவாகின்றன. உலக வாழ்க்கையை அர்த்த முள்ளதாகச் செய்திட ஆதாரமாகவும் ஆறுதலாகவும் அமைந்த நீதிக் கதைகளின் வாயிலாக மனித வாழ்க்கைக்கு அவசியமான அன்பு, பாசம், நேசம், கருணை, ஒழுக்கம் போன்ற பல்வேறு குணநலன்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. இவ்வகையில், பஞ்சதந்திரக் கதைகள் மற்றும் ஈசாப் கதைகள் குறிப்பிடத் தக்கவை.

பழம் பெரும் நாடான நமது அருமைப் பாரதம் வரலாற்றுப் பெருமை உடையது. நமது நாட்டின் இதிகாசங்களும், காப்பியங்களும், புராணங்களும் சொல்லுகின்ற நீதியின் கதைகள் ஒன்றா? இரண்டா?—சாதிமத பேதங்களைக் கடந்து வாழும் அன்பின் மகிமை, ஒழுக்கத்தின் மேன்மை, மனங்களின் ஆசாபாச விளையாட்டு, ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டின் தேவை, ஈவிரக்கத்தின் இயல்பு, தேசபக்தியின் சிறப்பு, கடமையின் கண்ணியம்,