பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பூவை எஸ். ஆறுமுகம்

சட்டைப்பையிலிருந்து மாடி அறைச் சாவியைக் கையில் எடுத்துக்கொண்டே சுற்று முற்றும் பார்த்தார் ராமையா. பசி வயிற்றைக் கிள்ளியது. மீண்டும் ஒரு தரம் அந்தக் கூடத்தை நோக்கினார் அவர். எடுபிடிப் பையன் அதிசயம் எங்கே?—விசாரித்தார், ராமையா. அவர்தான் அந்தக் கம்பெனியின் நிர்வாகி, தஞ்சையை அண்டியிருந்த திருக்காட்டுப்பள்ளியில் வசிக்கும் முதலாளியின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர் ஆயிற்றே!

“உங்களுக்கு மத்தியானச் சாப்பாடு எடுத்தாந்து மாடி வராந்தாவிலே வச்சிட்டு வீடு வரைக்கும் போயிட்டுத் திரும்பிடுறதாகச் சொல்லிட்டுப் போயிருக்கானுங்க அதிசயம். அவனோட அம்மாவுக்குக் காய்ச்சலாம்,” என்றார் பெரியவர் பெரியசாமி.

“அட, பாவமே!” என்று வருந்தினார் ராமையா. “அதிசயம் யையனும் நல்லவன்; அவன் அம்மாவும் தங்கமானவங்க. அவங்க இரண்டு பேரையும் கர்த்தர் நல்லபடியாய்க் காப்பாற்றுவார்!” என்றார் அவர். மனிதாபிமானத்தோடு அவருடைய கண்கள் கலங்கின. பசித்தது; பசிக்குப் பதில் சொல்ல வேண்டாமா?—மாடிக்கு விரைந்து மாடிக் கதவைத் திறந்தார். ஞாபகமாகச் சட்டையை ஆணியிலிருந்து எடுத்து வெளிச்சத்தில் சட்டையின் உள்பையைத் துழாவினார். அவருக்குத்