பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

17

மறுகணத்தில், சிறுவன் அதிசயம் அதிசயமாகவே பதறிப்போய் விட்டான், பாவம்!- “ஸார்” என்றான். மேற்கொண்டு எதுவும் பேசாமல் தயங்கி நிற்கவே, “என்ன? ஊம், சொல்லேன்!” என்று அதட்டினார் ராமையா.

பயந்து போய்விட்டான் பையன். ”ஸார்! என்னை மன்னிச்சிடுங்க. நான் தப்புச் செஞ்சிட்டேன்! அம்மாவுக்குக் காய்ச்சல் அதிகமாயிடுச்சுங்க; அதனாலே வெளியிலே தெரிஞ்சவங்ககிட்டே கைமாற்று வாங்கவும் வழியில்லாமல் போயிடுச்சு; வீட்டிலேயும் அரிசி சாமான்கள் துளியும் மிச்சம் மீதமில்லை. நான் காலையிலே கஞ்சி கூட குடிக்கலிங்க. நீங்க கொஞ்சம் முந்தி, வெளியிலே போனப்ப, நீங்க பின்கதவை அடைக்க மறந்ததைக் கவனிச்சுக்கிட்டேன். அதனாலே, பின்பக்கத்திலே சுவரேறிக் குதிச்சு அறைக்குள்ளே நுழைஞ்சு உங்க சட்டைப் பையிலேயிருந்த ஐம்பது ரூபாய் நோட்டையும் நானேதானுங்க திருடினேன்!” என்று விம்மினான்.

“திருட்டுப் பயலே!” என்று ஆத்திரத்திலே கூவிய ராமையா உடனே அதிசயத்தைக் கன்னத்தில் அறைந்தார்.

அப்போது, “ஐயா!” என்று அலறிக் கதறிக் கொண்டே தள்ளாடித் தடுமாறி ஓடி வந்து நின்றாள் அதிசயத்தின் தாய் லூர்தம்மா! ஐயா,