பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பூவை எஸ். ஆறுமுகம்

பெரியசாமிக்குக் கோபம் பெரிதாக வராமல் இருக்குமா? கோபத்தோடு அச்சிறுவனைத் தொடர்ந்தார்.

அப்போது...

“குமார்! உடம்புக்கு என்னப்பா? நேற்று சாயந்திரம் என்னோடு கோலி விளையாடினாயே” என்று நா தழுதழுக்கக் கேட்டபடி குமாரின் உடம்பைத் தொட்டுப் பார்த்தான் பாலமுருகன். அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியது.

பாலமுருகனை ஏறிட்டுப்பார்த்தான் குமார். “அழாதேப்பா பாலமுருகா! என் உடம்பு இனி சரியாயிடும். நீ போய் அப்பாவைப்பார். நோயால் அவதிப்படுகிற உன் அப்பா அம்மாவோட நிலைமையை எடுத்துச் சொல்லு. எனக்குக் காய்ச்சல் என்கிறதாலே அப்பா அம்மா நிம்மதியில்லாமல் இருப்பாங்க.

சமயம் பார்த்து, அவரிடம் விஷயத்தைச் சொல்லு. ஆண்டவன் நல்லவன். எங்க அப்பாவும் நல்லவர்தான். அநேகமாக உனக்கு ஒரு நல்லவழி கிடைக்குமப்பா” என்றான்.

“குமார்! எங்க சின்ன முதலாளியோட உடம்பு சீரானதும் எங்க பெரிய முதலாளியை வந்து பார்க்கிறேன்.