பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

29


சென்ற சொத்து இம்மாதிரி உபதேச மொழிகள்தாம். நான் போய்வருகிறேன்...”

***

கொலு மண்டபத்தில் மெய்க்காப்பாளன் போட்டி நடந்தது. போட்டியில் கலந்துகொண்டவர்கள் ஆவலோடு முடிவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக அந்த மூன்று புலிகளும் இருந்தார்கள்; கூட அந்தப் பட்டிக்காட்டு இளைஞனான மாணிக்கமும் நின்றான்!

ராஜநிருபர் வந்து, மன்னரின் ஒலையை வாசித்தார்:

‘'இன்று நடந்த மெய்க்காப்பாளர் பதவி பொறுப்பு நிறைந்தது; அன்புள்ளம், கடமை ஆயுணர்ச்சி எல்லாம் நிரம்பப் பெற வேண்டியது. மெய்க்காப்பாளர் பதவிக்குரிய எல்லா நற்குணங் ளும் ஒருங்கே அமையப்பெற்ற மாணிக்கம் என்ற யுவனுக்கே மெய்க்காப்பாளன் பதவியைக் கொடுப்பதாக மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்....!”

மாணிக்கம் ஆனந்தக் கூத்தாடினான். “மன்னர் பிரான் வாழ்க!...மன்னர் பிரான் வாழ்க...!” என்று தன்னை மறந்து வாழ்த்தினான்.

அப்போது, அவன் ஆற்றில் உதவி செய்த கிழவன் வேகமாய் வந்தான். தம்பி! நீ வெற்றி பெற்று விட்டாயல்லவா? மெத்த மகிழ்ச்சி.எல்லாம் அவன் செயல்!” என்று ஆசி கூறினான்.