பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பூவை எஸ். ஆறுமுகம்

அரசன் அருந்துவதையே பார்த்தான் வேலைக்காரன், தன் தாடியையும் மீசையையும் தடவிய வாறே.

“ரவி! இந்தப்படம் எப்பொழுதும் என் கண்பார்வையில் படும்படி சுவரில் அமை. நீ என்னிலும் வயது சென்றவனல்லவா? நீ சொல், என் இளவரசன் எனக்குக் கிடைப்பானா? என் கையாலேயே என் மகனுக்குப் பட்டம் சூட்டுவேனா? பராசக்தி அருள் பாலிப்பாளல்லவா?...” என்று குரல் நடுங்கக் கேட்டார் அரசர்.

“அரசே! என்னை நம்புங்கள். இளவரசர் கட்டாயம் கிடைப்பார். இப்போதே நான் புறப்படுகிறேன் அவரைத் தேடி. நீங்கள் ஒய்வு பெறுங்கள். வேந்தே!...”

அன்றைக்கு அமிர்தபுரி ராஜ்யம் கோலாகலமாகத் திகழ்ந்தது. எங்கும் ஒரே ஆனந்தம்!

தேவி பராசக்தியின் ஆலயம் ஜோதிமயமாக விளங்கியது.

மன்னர் மன்னர் குணேந்திரபாலன் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அன்றைக்குத் தான் புன்னகை புரிந்தார். ஆம்: அரசரின் காணாமற்போன மைந்தன் இளவரசர் ராஜேந்திர பாலன் கிடைத்துவிட்டார்...! தேவியே அவரை நேரில் கொண்டு சேர்த்து விட்டிருக்கிறதென்று தான் ஊர் உலகம் பேசியது!