பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

43


அதிபருடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளும் கட்டத்தில் இருந்தார் லால்பகதூர் அவர்கள். தாஷ்கண்ட் வீரராகக் திகழப்போகும் தியாக சீலரின் தன்னலம் துறந்த வாழ்வைப்பற்றி! எண்ணியவாறு இருந்தார்.

பெருமனைக்கு வைக்கப் படவேண்டிய பெயர்களை அவரவர்கள் தங்கள் போக்குப்படி பிரஸ்தாபித்தார்கள்.

காமராஜுக்குக் காங்கிரஸ்தான் உயிர்; தாய் தந்தையரைப் போலவே ஆகவே அவன் தன் இஷ்டப்படி, 'காந்தி இல்லம்' என்று பெயர் சூட்ட விழைந்தான்.

மோகன்தாஸுக்கு பெரியார் தான் ஜீவன் அந்தப் போக்கில் அவன் தன்னுடைய கருத்தைச் சொன்னான்.

நேருவுக்கு அண்ணாத்துரை தான் குரு அவன் அந்தப்படியில் நின்று பெயரை வெளிப்படுத்தினான்.

கடைக்குட்டிக்கு ஜீவாதான் குறி. அவன் விருப்பப் பிரகாரம் பெயரை உரைத்தான்.

இந்தப் பிள்ளைகளின் ஆவல்களைப் பற்றிச் சிவசிதம்பரம் தம் மனையாட்டியுடன் உரையாடிக் கெர்ண்டிருந்தார். பிள்ளைகளின் சொந்தக்கருத்துகளில் குறுக்கிட விரும்பாதவர் அவர். ஆனாலும்