பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பூவை எஸ். ஆறுமுகம்

அரசோட வயது வந்தோர் கல்வித் திட்டத்திலே சேரும்படி செய்கிறது இனி என்னோட கடமையாக்கும்!...நீ காலேஜிலே சேர்ந்து புதுக்கோட்டையிலிருந்து நீ எழுதுற கடிதங்களை நானே படிச்சுப் பார்த்துக்கிடவும் பழகிக்கிடுவேனாக்கும்! -நம்ம கிட்டே இருக்கக் கூடிய செல்வத்தை விட, எழுத்தறிவுச் செல்வம் அழியாதது அப்படின்னு நீ ஒரு வாட்டி பாடம் படிச்சுக்கிட்டு இருந்ததோட உண்மை எனக்குத் தெளிவாகவே மனசுக்குப் புரிஞ்சிடுச்சு, மகனே!” என்றார் ஆதியப்ப அம்பலம்.

மறு கணத்தில், காமாட்சி அம்மாளும் ஒடிப் பாய்ந்து வந்தாள். "என் வீட்டுக்காரரோட சேர்ந்து நானும் ஆனா-ஆவன்னா படிச்சுக்கிடப் போறேனுங்க! அப்பத்தானே, எங்க அருமை மகன் காந்திராமன் எழுதுற கடிதங்களை நானும் படிச்சு மகிழ முடியும்?” என்றாள்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்படலாயிற்று.

படிப்பறிவு பெற விழிப்புப் பெற்ற வயது வந்தோர் அரசின் முதியோர் கல்வித் திட்டத்திலே சேர முன்னே வந்தார்கள்!காந்திராமனின் அன்னை காமாட்சி அம்மாளின் வழியைப் பின்பற்றத் தாய்மார்களும் முன்னே வந்தார்கள்!

“ஆஹா உங்கள் எல்லோருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! நம்ம