பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பூவை எஸ். ஆறுமுகம்

தான்!...எங்க நாட்டவர்களோட வஞ்சகப் போக்கு எங்களுக்குக் கட்டோட பிடிக்காதப்பா! என்னை நம்புங்க!...நாங்க இவ்வளவு காலமா உங்க நாட்டு உப்பைத்தானே சாப்பிட்டுவரோம்!” என்று நன்றியுணர்வு மேலிடக் கெஞ்சினான் சீனத்துச் சிறுவன்

“ஊஹூம் முடியாது!"

“ம்...ஒடு!...இல்லாட்டா உன்னை ஒட வச்சிடுவோம்!"

"இந்தாப்பா, கல்!”

"டேய்...! அதைக் கீழே போடுப்பா!...முதலிலே நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க!” என்று மீண்டும் கெஞ்சிக் குழைந்தான் சூ.

அவனது வற்புறுத்தலின் பேரில் விளையாட்டை மறந்து, எல்லோரும் அவனைத் தொடர்ந்தார்கள். சூவின் வீட்டினுள் நுழைந்தார்கள் அவன் காட்டிய அறையில் பிரவேசித்தார்கள்.

என்ன ஆச்சரியம்!... அங்கே காந்திஜி, நேருஜி, இந்திரா காந்தி முதலிய பெருந்தலைவர்கள் படரூபத்தில் சுவரை அலங்கரித்தார்கள்.

கீழே குளிந்தான் பழனி.

சீன நாட்டு வஞ்சகக் குள்ள நரியின் படம் நொறுங்கிக் கிடந்தது.