பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பூவை எஸ். ஆறுமுகம்

அன்று;

பகல் உணவு வேளைக்கான மணி அடிக்கப்பட்டது.

ஏழைப் பிள்ளைகள் வரிசை வரிசையாகவும் தட்டும் கையுமாகவும் சத்துணவுக் கூடத்தை நோக்கி நடக்கத் தலைப்பட்டனர். தட்டுக்களிலே சத்தான உணவு நிரம்பியது.

கண் நிறைந்த அந்தக் காட்சியைக் கண் கொள்ளாமல் பார்வையிட்ட காந்திராமன் பெருமையும் பெருமிதமும் கொண்டவராகத் தமது அறைக்குத் திரும்பினார்.

தட்டுக்களிலே சத்தான உணவு நிரம்பி வழிந்தது.

சிறுவர்—சிறுமியரின் முகங்களிலே மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

சாண் வயிறுதான்!—ஆனாலும் அதன் பசிக்கு அளவில்லை அல்லவா?

அவரவர்கள் உண்ணத் தொடங்கினர்.

ஆனால்—

நேரு மட்டும் சாப்பிடாமல், சிந்தனை வசப்பட்டவனாக உட்கார்ந்திருந்தான். மறு நிமிடம் ஏதோ முடிவுக்கு வந்தவனாக எழுந்தார்; சுற்றுமுற்றும் பார்த்தார்; உணவுத்தட்டுடன் விரைவாக நடக்கத் தொடங்கினான்.