பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பூவை எஸ். ஆறுமுகம்

விட்டு, மருத்துவ நூல் ஒன்றைப் படிப்பதில் ஈடுபட்டார்.

அன்றைக்கு மத்தியான்னம் மணி பன்னிரண்டு அடித்து விட்டது.

ஒரு நோயாளிகூட அவரது ஆஸ்பத்திரியைத் தேடி வரக்காணோம்!

டாக்டருக்கு வியப்பு மேலிட்டது. என்ன விசேஷம். வாடிக்கை நோயாளிகளைக்கூட காண வில்லையே! என் மருந்து இல்லாமல் அவர்களுக்கு நோய் தீர்ந்து விட்டதா? அல்லது, என் மருந்து வேலை செய்து அதன் பலனாக, அவர்களுக்கு நோய் குணமாகிவிட்டதா? அல்லது, அவர்கள் எல்லாரும் வேறு டிஸ்பென்சரிக்குப் போய் விட்டார்களா?’ என்று பிரமாதமாகச் சிந்தனை பண்ண ஆரம்பித்துவிட்டார்.

மருத்துவ மனையில் நிலவியிருந்த பயங்கர அமைதியைக் கண்டு டாக்டரின் அருமைப் புதல்வி பூங்கோதையும் வருந்தினாள்.

கம்பவுண்டர் கண்ணப்பனும் மெளனமாக நின்றார்.

அப்போது, டாக்டரின் மனைவி மங்களம் வந்தாள். ”நெற்று நீங்க இரண்டொரு நோயாளிகளிடம் கோபமாய்ப் பேசினிங்களே, அதனாலே, அவர்கள் இங்கு வராமல், வேறு இடத்துக்குப்