பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

87

அந்தச் சின்னஞ்சிறு உலகின் மகிழ்ச்சி தடைபட்டதற்குக் காரணம் இதுதான்:

அங்கு இருந்த வெளிச்சம் மறைந்தது; இருள் சூழ்ந்தது!

சின்னஞ்சிறுவர்-சிறுமியர் கூட்டம் மலைத்துப்போய் நின்று விட்டது.

மத்தாப்பூக்கள் டப்பாக்களுக்குள் தூங்கின.

ஒருமுறை இத்தகைய சூழ்நிலைக் காட்சியை நோட்டம் விட்டது அகல் விளக்கு. அதற்கு ஏற்பட்டிருந்த மகிழ்ச்சி கொஞ்சநஞ்சமில்லை. அது ஒரு நொடிப் பொழுதிற்குத்தான்!...மறு வினாடி, அது தன் மனத்தை விரியச் செய்தது.

“ஐயையோ!... சின்னூண்டு அகல்விளக்கு அணைஞ்சு போனதாலே, நாமெல்லாம் மத்தாப்பூ கொளுத்தி விளையாட முடியாமப் போயிடுச்சுதே!’ என்று புழுங்கினார்கள்.

மத்தாப்பூக்களின் பரிதாபக் கோலத்தைக் காண அகல் விளக்கு மனம் நெகிழ்ந்தது.

சிறுவர்-சிறுமியர் துயரத்தைப் பார்த்த அகல் விளக்கின் உள்ளம் இளகியது.

அடுத்த கணம், மறைத்து வைத்திருந்த ஒளியை வெளியே காட்டியது அந்த அகல்