பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த ஆண்டி எங்கே?

பூவைமாநகர்ப் பாலதண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரத்தன்றைக்குத்தான் குரு பூஜை, சுவாமிக்குத் தூப தீபாராதனை செய்து முடிந்ததும். ‘கரும்ஜனங்கள்’ என்றழைக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு அன்று அன்னம் வழங்கப்படும். முன் கூட்டியே, சுற்றுவட்டப் பதினாறு தலைக்கட்டுக் கிராமங்களுக்கும் இவ்விவரம் பறை அறிவிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வந்தது, அவ்வாறே அவ்வருஷமும் சந்தைகளிலே குருபூஜைச் செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டம் பெருகிவரக் கேட்கவும் வேண்டுமா?

வெள்ளம்போல் மக்கள் திரள் கூடியது.

காலம் வெறிச்சோடிக் கிடந்தது.

பணம் கிடைத்தாலும், அரிசி கிடைக்காத காலம் இது.

இந்நிலையிலே, ஏழைபாழைகளின் கூட்டத் திற்குக் கேட்க வேண்டியதில்லை தானே?