பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!

91

அவரவர்களுக்கு மந்தாரை இலைகள் போடப்பட்டன. அடுத்தபடியாக, சோறும் குழம்பும் போடப்பட்டன.

ஒரே மூச்சாக, ஆவலுடன் அவரவர்கள் சோறு உண்ணத் தலைப்பட்டார்கள்.

அதோ, அதுதான் ராமையாவின் பொறுப்பில் நடந்த சாப்பாட்டுப் பந்தி.

கையில் சுழன்ற கழியுடன் அவன் டெர்லின் சட்டை மின்ன ‘கார்வார்’ செய்து கொண் டிருந்தான்.

ஆ! என்ன கலாட்டா அது?

ஏன் அப்படி எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது. ராமையாவின் முகத்திலே?

விஷயம் இதுதான்.

குடுகுடு கிழவன் ஒருவன் தனக்குப் போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் ஒரு தரம் ரகசியமாகச் சோறும் குழம்பும் வாங்கிக் கொண்டு தன்னுடைய கந்தல் துணியில் முடிந்து கொண்டிருந்தான். இதைக்கண்டு கொண்டான் ராமையா. இளம் இரத்தம் துடித்தது. இயல்பாக இருக்க வேண்டிய பச்சாதாபத்தையும் கடந்து அவன் ஆத்திரம் கொண்டான்.