பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

93

கிறதுக்கு அன்னதானம் செய்வாங்க, ஆனால் நீங்களோ பாவத்தைச் சம்பாதிக்கிறீங்களே?” என்று பொரிந்து தள்ளியவன், நீர் வழிந்த கண்களுடன் அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான்.

மறுகணம் அவன் என்ன செய்தான் தெரியுமா?

தன் கைக் கம்பினால் ராமையாவை நெட்டித் துரத் தள்ளிவிட்டான் அந்தப் பிச்சைக்காரக் கிழவன்.

எட்டத்தேபோய் விழுந்து விட்டான் ராமையா. அவனது டெர்லின் சட்டையில் சகதி படிந்தது. கூட்டம் கூடியது. ஆத்திரம் பொங்க எழுந்தான் ராமையா. கீழே கிடந்த சவுக்கு விறகு ஒன்றை எடுத்து, அந்த வயோதிக ஏழையைத் தாக்க மீண்டும் முனைந்தான் அப்பணக்கார இளைஞன்.

அப்போது, ஆண்டிப்பண்டாரம் ஒருவன் அவசரமாகப் பாய்ந்து குறுக்கே மறித்து நின்றபடி, ராமையாவைத் தடுத்தான்.

“தம்பி கோபத்தை அடக்கு, ஆனால் அன்பை அடக்கிவிடாதே! அதோ பார், பாம்பு! இந்த ஏழை மட்டும் உன்னைக் கழியால் தடுத்திராவிட்டால், இந்நேரம் அந்தப் பாம்புக்குப் பலி ஆகியிருப்பாயே நீ!...தெய்வம் அன்பின் சோதனையிலே மனிதர்கள் ரூபத்திலேயும் வருவது இல்லையா தம்பி? கலிகாலம் இது! வரவர, எதிலேயும் ஏன் தெய்வத்தின் நினை