பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பூவை எஸ். ஆறுமுகம்

விலே கூட, ஜனங்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது போலிருக்கிறது!...நீ இன்று மறு பிறப்பு எடுத்திருக்கின்றாய்!...அந்த ஏழையிடமிருந்து பறித்த உணவை அவன்வசம் ஒப்படைத்து அவனிடம் மன்னிப்புக் கேள், தம்பி!” என்றான் அந்த ஆண்டிப்பண்டாரம்.

இளைஞன் ராமையா திரும்பினான். அந்தப்பாம்பு சீறிக்கொண்டு ஓடியது. அவன் அக் கிழவனை நோக்கினான்.

கிழவனோ தன் குடிசையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

ராமையா அவனை எவ்வளவு மன்றாடி அழைத்தும் அக்கிழவன் திரும்பவில்லை. “ஏழைங்களுக்கும் மானம் உண்டு ஐயா! உங்க சோற்றை நீங்களே சாப்பிடுங்க...உங்க சோற்றை நான் முதலிலே உண்டதே பாவம்!” என்று சொல்லி வழி நடந்தான்.

ராமையா நெஞ்சுச் சுமையுடன் திரும்பினான். அவன் அந்த ஆண்டிப்பண்டாரத்தைத்தேடினான்.

அவனைக் காணவில்லை!

எங்கே அந்த ஆண்டி!

அவனைக் காணவேயில்லை!

ஒருவேளை, இந்த ஆண்டிதான் “அந்த ஆண்டி”யாக இருப்பானோ?