பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43



அப்போது, மிகவும் 'ஸ்டைலாக' அங்கு வந்தான் சிறுவன் ஜெயராஜ். உள்ளே அடியெடுத்து வைத்ததும், அவனே அழைத்து, “உன் அப்பா சாம்பான் வந்திருக்காரப்பா" என்றார் கனபாடி.

உடனே ஜெயராஜின் சிவந்த முகம் மாறிவிட்டது. சுதாரித்துக்கொண்டான். “என் அப்பா உயிருடன் இல்லீங்களே!” என்று பதிலளித்தான்.

‘ஏய்!” என்று அதட்டியபடி அங்கு தோன்றினார் அம்மனிதர். இரவு இவனைத் தேடி வந்தாரே அவர்தான்! அவர் இப்போது போலீஸ் உடுப்புக் களோடு நின்றார். அவர் அவன் கன்னங்களிலே அறைந்தார்.

“பெற்ற அப்பனைப்பற்றிக்கூடவா உன்க்கு இளக்காரம் வந்துவிட்டது!" என்று அதட்டினார் போலீஸ்காரர்.

அருகில் ஒதுங்கி நின்ற உமைபாலன் ஏன் அப்படித் துடித்தான்?...

செருமியபடி நின்றன் ஜெயராஜ்.

“ம்... நடந்ததையெல்லாம் சொல்லு.இந்த ஐயரும் கேட்கட்டும்!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/48&oldid=1318744" இலிருந்து மீள்விக்கப்பட்டது