பக்கம்:ஓ மனிதா.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோழி கேட்கிறது

81

சண்டை மூட்டிவிட்டு ‘ஹாய்ஹூய்’ என்றுகுதுாகலித்தீர்கள்.

அதற்கடுத்தாற்போல் நாங்கள் கிடைத்தோம் உங்களுக்கு. எங்களில் இரண்டைப் பிடித்து ஒன்றோடொன்றை மோத விட்டீர்கள். அதை நீங்கள் மட்டும் வேடிக்கை பார்த்தால் போதாதென்று கூட்டம் வேறு சேர்த்தீர்கள். வெறும் நகத்தை வைத்துக் கொண்டு நாங்கள் சண்டையிட்டது உங்களுக்கு அவ்வளவு ரசமாகப்படவில்லை; அதற்காகக் கத்தியை வேறு எங்கள் கால் விரல்களில் கட்டிவிட்டீர்கள். அதனால் எங்களுக்கிடையே ஏற்பட்ட ரத்தக் களறி உங்கள் இதயத்தை இரக்கத்தால் துடிக்க வைக்கவில்லை; இன்பத்தால் மலர வைத்தது—தெய்வமாக முயன்று கொண்டிருக்கும் மனிதர்களல்லவா?

பிறகு, உங்கள் கவனம் மிருகங்களின் மேல் சென்றது. ‘எந்தெந்த மிருகங்களுக்கு இடையே சண்டை மூட்டி விட்டால் வேடிக்கை பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்?’ என்று நீங்கள் மூக்கின் மேல் விரலை வைத்து யோசித்தீர்கள். சிங்கம், புலி, கரடி, யானை நினைக்கும்போதே உங்கள் உள்ளம் நடுங்கிற்று; உடல் சில்லிட்டுப் போயிற்று—யானை, ‘ஏ மனிதா, என்னையா சண்டையிட வைத்து வேடிக்கை பார்க்கப் போகிறாய்?’ என்று துதிக்கையால் நம்மை ஒரு பிடி பிடித்து எலும்பை நொறுக்கினாலும் நொறுக்கலாம்; புலி பாய்ந்தாலும் பாயலாம், சிங்கம் ஒரே கவ்வில் நம் ரத்தத்தை உறிஞ்சி குடித்தாலும் குடிக்கலாம்—அப்புறம்?—மனிதனை எதிர்த்துத் தாக்கத் துணியாத ஆட்டுக்கடாதான் அதற்குச் சரியென்று பட்டது உங்களுக்கு உடனே அவற்றில் இரண்டிைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/82&oldid=1370920" இலிருந்து மீள்விக்கப்பட்டது