பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இந்தப் பெயர்களைக் கேட்டதும் புலிக்கு மேலும் சந்தேகம் அதிகமாகிவிட்டது. “பெயரெல்லாம் விநோதமாக இருக்கிறதே!” என்று தாழ்ந்த குரலில் புலி கேட்டது.

“ஆமாம், மூத்த அண்ணன் புலியின் கழுத்தைச் ‘சடக்’கென்று கடித்துக் கொல்வான். அதனால் அவன் சடக்கிட்டி முடக்கிட்டி. இரண்டாவது அண்ணன், புலியின் முதுகு எலும்பை ‘மடக்’ என்று கடிப்பான். அதனால் அவன் பெயர் மடக்கிட்டி முடக்கிட்டி. நான் ‘கடக்’ என்று கடிப்பேன். அதனால் நான் கடக்கிட்டி முடக்கிட்டி” என்றது கழுதை.

“அது சரி. எல்லோருக்குமே முடக்கிட்டி என்று பொதுவாக எப்படிப் பெயர் வந்தது?"

“அதுவா? அது எங்கள் அருமையான பட்டப்பெயர்” என்று கழுதை தலையை நிமிர்த்திக்கொண்டு சொல்லிற்று.

“யார் அப்படிப் பட்டம் கொடுத்தார்கள்?”

“நம் சிங்க ராஜாதான் கொடுத்தார். வேறு யார் கொடுப்பார்கள்?”

“எதற்காக அப்படிப் பட்டம் கொடுத் தார்?”

“எல்லாம் எங்கள் வீரச்செயலைப்பற்றி அறிந்து தான் கொடுத்தார். மூத்த அண்ணன் நூறு புலிகளைச் ‘சடக்’ என்று கடித்துக் கொன்றார். சின்ன அண்ணன் இருநூறு புலிகளை ‘மடக்’ என்று கடித்தெறிந்தார். நான் அவர்