பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

அது பட்டணத்தை விட்டு அதன் அருகில் உள்ள காட்டிற்கு வந்து சேர்ந்தது. அங்குதான் அது கடக்கிட்டி முடக்கிட்டியை மாலை வேளையில் சந்தித்தது.

விறகு சுமந்து பட்டணத்திற்குச் சென்று அப்பொழுதுதான் கடக்கிட்டி முடக்கிட்டி திரும்பி வந்திருந்தது. வழக்கம்போல் கழுநீரைக் குடித்தவுடன் அது குடிசையை விட்டு வெளியே புல் மேய வந்தது. வந்த இடத்திலே அது அந்தக் கிழட்டுக்குதிரையைச் சந்தித்தது. தனக்கு ஒரு நல்ல பேச்சுத் துணை கிடைத்தது என்று அதற்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று. அதனால் அது கிழட்டுக் குதிரையிடம் மிகுந்த அன்பாக நடந்து கொண்டது. குதிரையும், இப்படி விநோதமாகச் சாயம் பூசிய கழுதையைப் பார்த்ததே இல்லை. அதனால் அதற்கும் கடக்கிட்டி முடக்கிட்டியிடம் அன்பு பிறந்தது.

இரண்டும் உல்லாசமாகப் பேசிக்கொண்டே காட்டில் புகுந்து புல் மேயத் தொடங்கின. கடக்கிட்டி முடக்கிட்டிக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்த மகிழ்ச்சியால், அது காட்டிற்குள் அதிக தூரம் போகக் கூடாது என்பதை அடியோடு மறந்து விட்டது.

குதிரையும் பல நாள் நல்ல பச்சைப் புல்லைக் காணாமல் வயிறு வாடிக் கிடந்தது. அதனால் அதுவும் உற்சாகமாகக் காட்டில் புகுந்து மேயலாயிற்று. பசும்புல்லை நிறையத்