பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

வோம். அப்பொழுது உங்களுக்கு ஆபத்து வந்தால் எனக்கும் வரும் அல்லவா? உங்களுக்கு வஞ்சனை செய்ய மாட்டேன். நான் வேண்டுமானாலும் முன்னாலே செல்லுகிறேன்” என்று குள்ளநரி உறுதி கூறிற்று. குள்ளநரிக்கு நல்ல பசி: அந்த இரண்டு விலங்குகளையும் விட்டு விட மனம் வரவில்லை.

“சரி, அப்படியே வாலை முடிந்துகொள்வோம். நீதான் முன்னால் செல்ல வேண்டும்” என்று புலி தயக்கத்தோடு பதில் அளித்தது.

குள்ளநரி சொன்னவாறே இரண்டும் தங்கள் வாலை நன்றாக முடிந்துகொண்டன. பிறகு குள்ளநரி முன்னால் நடந்தது.

கடக்கிட்டி முடக்கிட்டி இவற்றைக் கண்டதும் மறுபடியும் குதிரையின் மேல் ஒய்யாரமாக ஏறிக்கொண்டு உரத்த குரலில் பேசத் தொடங்கிற்று:

“நரி மாமா, அந்தப் புலியை உன் வாலில் கட்டி இழுத்துக் கொண்டு வர இவ்வளவு நேரமா? எனக்குப் பசி தாங்க முடியவில்லை. இழுத்து வா அந்தப் புலியை” என்று அது அதட்டும் குரலில் கூறிற்று. குதிரையும் முன்னால் பாய்ந்தது.

குள்ளநரி தன்னை வஞ்சகமாக ஏமாற்றி விட்டதாக நினைத்துப்புலி, உடனே காட்டுக்குள் ஓடத் தொடங்கிற்று. பாவம், குள்ளநரியின் வால் கெட்டியாகப் புலியின் வாலோடு முடியப்பட்டிருந்ததால் அது தரையிலும்